சாப்பிட்டது ஒரு குத்தமா..? MBA மாணவருக்கு நேர்ந்த கொடுமை; வீடியோ உள்ளே

மத்திய பிரதேச மாநிலத்தில், திருமண விழாவுக்கு அழையா விருந்தாளியாக வந்த எம்பிஏ மாணவர் ஒருவரை கண்டுபிடித்த உறவினர்கள், சாப்பிட்ட காரணத்திற்காக, அவரை பாத்திரம் கழுவ செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் என்றாலே விருந்தினர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம். வயிறு நிறைய சாப்பிட்டு வாயாற வாழ்த்த வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு. இதற்காக, உணவு விஷயத்தில் எந்த குறையும் வந்து விடக் கூடாது என்பதற்காக திருமண வீட்டார் கண்ணும் கருத்துமாக இருப்பர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், திருமண விழாவுக்கு அழையா விருந்தாளியாக வந்த எம்பிஏ மாணவர் ஒருவரை கண்டுபிடித்த உறவினர்கள், சாப்பிட்ட காரணத்திற்காக, அவரை பாத்திரம் கழுவ செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் போபாலில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், விடுதியில் தங்கி எம்பிஏ படிக்கும் ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழையா விருந்தாளியாக சென்று உணவு சாப்பிட்டு உள்ளார். இதனை கண்டுபிடித்த உறவினர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து சராமரியாக தாக்கினர்.

பிறகு, அவருக்கு தண்டனையாக பாத்திரம் கழுவ வைத்து உள்ளனர். “எம்பிஏ படிக்கும் உனக்கு பெற்றோர் பணம் அனுப்ப மாட்டார்களா..?” என கேள்வி எழுப்பி தாக்கினர். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவு செய்தார்.

இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும், இதனை மனிதநேயமற்ற செயல் எனக்கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.