பாலியா உத்தர பிரதேச சிறையில், விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டு, தம்பதி தற்கொலைக்கு முயற்சித்ததில் மனைவி உயிரிழந்தார்; கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பன்ஸ்சீஹ் பகுதியைச் சுராஜ், 25, தன் உறவினரை கொலை செய்த வழக்கில்,2021ல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மனைவி நீலம், 23.
சிறையிலிருக்கும் சுராஜுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லை. இதையடுத்து, கணவனை சந்திக்க நீலம் சிறைச்சாலை சென்றார்.
அங்கு இருவரும் சந்தித்த நிலையில் மனமுடைந்தனர். பின், இருவரும் விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதையறிந்த சிறைக்காவலர்கள், இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நீலம் உயிர் இழந்தார்.
சுராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement