ஜனநாயகம் பற்றி இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை !- ஐ.நாவில் இந்தியா அதிரடி!

ஜனநாயகத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவுக்கான பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறியுள்ளார்.
15 நாடுகளை கொண்டு, டிசம்பர் மாதத்திற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்தியா, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை குறித்த நிகழ்வை நடத்தியது. இதில் ஐ.நா.வுக்கான, இந்தியாவின் முதல் பெண் நிரந்தரப் பிரதிநிதியான ருசிரா காம்போஜ் பதவியேற்றுள்ளார். தான் பதவியேற்ற முதல் நாளில், ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மாதாந்திர வேலைத்திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர், ‘ சமீப காலமாக பாகிஸ்தான் , சீனா போன்ற நாடுகள் சர்வதேச அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவருவதாகவும் , பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஐ.நாவிலும் கூட இதுபோன்று முன்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
image
உங்களுக்கு எல்லாம் தெரியும், உலகிலேயே இந்தியா தான் முதலில் நாகரீகமடைந்த நாடு. இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தின் வேர் கொண்ட நாடு. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சமூக ஊடகங்கள் கூட சுதந்திரமாக தான் இருக்கிறது.
5 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் ஜனநாயக தேர்தலும் முறையாக நடக்கிறது. இதில் எங்கே ஜனநாயகம் தவறியுள்ளது சொல்லுங்கள்.. எல்லோருடைய கருத்தையும் வரவேற்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி கருத்தும் சொல்ல சுதந்திரம் உள்ளது. அப்படித்தான் இந்தியா செயல்படுகிறது. எனவே ஐனநாயகம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியம் ஏற்படவில்லை” என்றார்.
image
இந்தியாவுக்கான தலைவராக, பதவி ஏற்ற முதல் நாளிலேயே அதிரடியாக நாட்டின் மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என பாஜகவினர் ருசிரா காம்போஜை பலர் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் – ஆசை ஆசையாய் இருந்த ஆசையை அனுபவித்து மகிழ்ந்த பெண்கள் – என்ன ஆசை அது?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.