பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள விண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த் நகரில் நடந்து வரும் முதல் போட்டி 3ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் வர்ணனையாளராக, ஆஸி., அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றினார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement