விஜய்க்கு வில்லனாக அழைத்த லோகேஷ் கனகராஜ்… மறுத்துவிட்ட கார்த்திக்?

மாநகரம் படம் தொடங்கி விக்ரம் படம்வரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி பெற்றவை. குறிப்பாக கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தௌ மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் என கூறப்படும் 

இதற்கிடையே படத்தின் கதை, திரைக்கதை எழுதுவதற்காக சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறினார் லோகேஷ். மேலும், விக்ரம் படத்திற்கு ப்ரோமோ ஷூட் செய்யப்பட்டதுபோல் இந்தப் படத்திற்கும் ப்ரோமோவுடன் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.

இப்படத்தில் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வில்லன் எனவும் தகவல் வெளியானது. அந்தவகையில் சஞ்சய் தத், ப்ரித்விராஜும் படத்தில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கை லோகேஷ் கனகராஜ் அணுகியதாகவும்; ஆனால் தனது உடல்நிலையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. கார்த்திக் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் தற்போது பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, படத்தின் பூஜை, ஷூட்டிங் எங்கு நடக்கப்போகிறது என்பவை குறித்த தகவல்கள் வெளியாகின. அதன்படி படத்தின் பூஜை வரும் 5ஆம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் 15 நாள்கள் சென்னையில் நடக்குமெனவும், அதை முடித்துக்கொண்டு படக்குழு காஷ்மீர் செல்லவிருக்கிறது எனவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.