வேலையில்லா விகிதம் திடீர் அதிகரிப்பு… தேவைப்படும் முன்னெச்சரிக்கை..!

கொரோனா உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கி ஓராண்டுக்கு மேலாகி விட்டபோதிலும், இந்தியாவில் வேலையில்லா விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா விகிதம் திடீரென அதிகரித்துள்ளதாக CMIE தரவுகள் தெரிவிக்கின்றன.
முடங்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள்
இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கக்கூடியதாக கருதப்படும் முக்கிய துறைகளில் ஒன்றாக கருதப்படுவது சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான்.
* ஆனால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் (Demonetisation),அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி (GST) வரிவிதிப்பு முறையும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை பெருமளவில் முடக்கிப்போட்டதாக கூறப்பட்டது.
* இதன் விளைவாக தொழில் முடக்கம், அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சரிவு ஏற்படத் தொடங்கியது. இந்த நிலையில்தான் 2020 ல் வந்த கொரோனாவால் ஏற்பட்ட முடக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
வேலை இழப்பு
கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலே, அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையை இழந்தனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கின. நாடு பொருளாதார ரீதியாக பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், 2021 ல் வந்த இரண்டாம் அலையின்போது நிலைமை மேலும் மோசமானது.

* நாடெங்கிலும் 1.5 கோடி பேருக்கு மேல் வேலையை இழந்ததாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக நீங்கி, இயல்பு நிலை திரும்பி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகிவிட்டாலும், வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையே இன்னும் காணப்படுவதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மைய – CMIE – தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பரில் 8.96% அதிகரிப்பு
இது தொடர்பாக CMIE வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு 2022 நவம்பரில், முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அக்டோபரில் 7.21 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை, நவம்பரில் 8.96 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
* கிராமப்புறங்களில் சற்று வேலையின்மை குறைந்துள்ளது. அதாவது கிராமப் பகுதிகளில் 7.55 சதவிகிதமாக குறைந்துள்ளது.
* அக்டோபரில் 8.04 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை, நவம்பரில் 7.55 சதவிகிதமாக குறைந்துள்ளது.

* எனினும் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் நவம்பரில், முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.0 சதவிகிதமாக அதிகரித்து, உச்சத்தை அடைந்துள்ளது.
மாநிலங்கள் வாரியான நிலை
நவம்பர் மாதத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானா மாநிலம் 30.6%, ராஜஸ்தான் 24.5% ஜம்மு – காஷ்மீர் 23.9% பீகார் 17.3%, திரிபுரா 14.5% ஜார்க்கண்ட் 14.3% அசாம் 14%, கோவா 13.6 %, டெல்லி 12.7 % ஆந்திரா 9.1% இமாசல பிரதேசம் 8.1 %, பஞ்சாப் 7.8 %, மத்தியப் பிரதேசம் 6.2 %, தெலுங்கானா 6%, கேரளா 5.9 %,
மேற்கு வங்கம் 5.4 %, உத்தரப்பிரதேசம் 4.1 %, தமிழ்நாடு 3.8 %, மகாராஷ்டிரா 3.5 % புதுச்சேரி 2.9%, குஜராத் 2.5 %, மேகாலயா 2.1%, கர்நாடகா 1.8 %, ஒடிசா 1.6 %, உத்தரகண்ட் 1.2%, சத்தீஸ்கர் 0.1 % என்ற அளவில் வேலையின்மை விகிதம் காணப்பட்டதாக CMIE தரவுகள் தெரிவிக்கின்றன.
‘வீட்டுச் செலவில் கவனம் தேவை’
இந்த நிலையில், இந்த வேலைவாய்ப்பின்மை மற்றும் வேலையிழப்பு போன்றவை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் அதிகரித்து வரும் சூழலில் எத்தகைய முன்னெச்சரிக்கை தேவை..?
“விலையுயர்ந்த தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா..? இப்போது வாங்க வேண்டாம்… திட்டத்தைத் தள்ளிப்போடுங்கள்..!” என்கிறார் உலகின் நான்காவது பணக்காரரும், இணைய வணிகச் சந்தையின் முன்னணியில் இருக்கும் அமேசானின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ்.
அவர் எதனால் இவ்வாறு கூறுகிறார்… உலகில் என்ன நடக்கிறது..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
“ஸ்டாலின் அமைத்த பொருளாதாரக் குழு என்ன செய்கிறது..?” – கேள்வி எழுப்பும் ஜெயக்குமார்

பாஜக-விடம் எதிர்க்கட்சி என்ற இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டது அதிமுக என்ற விமர்சனம் தொடங்கி, ஆளுநரைச் சந்தித்தது, ஸ்டாலின்மீது வைக்கும் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த விறுவிறுப்பான் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
Fact Check: மோர்பி பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகைக்கு ரூ.30 கோடி செலவா?

குஜராத் மாநிலத்தில் நடந்த மோர்பி பாலம் விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேரில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.
அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்கு குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்து இருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இது உண்மைதானா..?
இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஃபேஸ்புக் டிபியில் `கீர்த்தி சுரேஷ்’ படம்… 40 லட்சம் இழந்த இளைஞர்!

கர்நாடகா மாநிலத்தில், விஜயப்பூர் மாவட்டம், சிந்தகி தாலுகாவில் உள்ள பாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் என்ற இளைஞன்.
இவரது ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் ஒன்று வந்திருந்தது.ஓர் அழகான பெண் நமக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளதாக நினைத்த பரசுராமன் அதை அக்செப்ட் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பரசுராமனுக்கு ஏற்பட்ட ரொமான்ஸ், அதனால் ஏற்பட்ட பண இழப்பு, மிரட்டல், இறுதியாக ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியின் உச்சிக்கே போன நிகழ்வுகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
Doctor Vikatan: தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு வாக்கிங் செல்வது சரியா?

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்றும் சொல்கிறார்கள்… எது சரி?
சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் அளிக்கும் விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
திரைத்துறையில் வெற்றிக்கொடி… AVM சக்சஸ் கதை!

சென்னை வடபழனியில் சுழன்று கொண்டிருக்கும் ஏவி.எம் உலக உருண்டை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. ஆனாலும், ஏவி.எம் தொடங்கப்பட்டது காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை ரஸ்தாவில்தான். கீற்றுக் கொட்டகையில் தொடங்கிய ஏவி.எம் ஸ்டூடியோ, ஏவி. மெய்யப்பன் என்ற ஆளுமையால் இன்று பெரும் மரமாக விரிந்து நிற்கிறது.
90 ஆண்டு கால பாரம்பர்யம் கடந்து ஏவி.எம் நிறுவனத்தின் அடுத்தடுத்த தலைமுறை மாற்றம் குறித்த தகவல்களைப் பகிர்கிறார், இந்நிறுவன இணை இயக்குநர் ஏவி.எம் கே.சண்முகம். அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…