சதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டனை மோசமாக விமர்சிக்கும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள்!



இங்கிலாந்து எதிராக சதம் விளாசிய பாபர் அசாமை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராவல்பிண்டி ஆடுகளம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.

மூன்றாவது நாளான இன்று பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சதம் அடித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமும் சதம் விளாசினார். இது அவருக்கு 8வது டெஸ்ட் சதம் ஆகும்.

மேலும், டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களில் சதம் விளாசிய ஏழாவது வீரர் என்ற பெருமையை பாபர் பெற்றார்.

அவருக்கு முன்பாக 4 இங்கிலாந்து வீரர்களும், இரண்டு பாகிஸ்தான் வீரர்களும் இதே டெஸ்டில் சதம் அடித்தனர்.

தொடர்ந்து விளையாடிய பாபர் 136 ஓட்டங்கள் எடுத்து வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கிண்டலுக்குள்ளான பாபர் அசாம்

இந்த நிலையில், பாபர் அசாம் சதம் விளாசியதை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக, ராவல்பிண்டி ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் இது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என்றும், ஆடுகளங்களை மேம்படுத்துவதில் தங்கள் நாடு இன்னும் இருளில் வாழ்வதாகவும் அவசர குறிப்பிட்டார்.

டெஸ்டின் மூன்று நாட்களில் 6 வீரர்கள் சதம் விளாசிய நிலையில், 7வதாக பாபர் அசாம் சதம் விளாசியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றும், பாகிஸ்தான் மண்ணில் மட்டுமே பாபர் அசாம் சதம் அடிப்பதாகவும் ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, இந்திய பந்துவீச்சாளர் பும்ரா கூட இந்த வரிசையில் சதம் விளாசுவார் என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.