சென்னையில் இருந்து நெல்லை திரும்ப தென்மாவட்ட ரயில்களில் அலைமோதும் கூட்டம்: ரூ.3900 டிக்கெட் கூட கிடைப்பதில்லை

நெல்லை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களில் நேற்று முதல் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து நெல்ைல திரும்ப ரூ.3900 பிரிமியம் தட்கல் டிக்கெட் கூட கிடைக்காமல் பயணிகள் திண்டாடுகின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதுண்டு. குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை உள்ளிட்ட ரயில்களில் இரு மார்க்கத்திலும் கூட்டம் அதிகம் காணப்படும்.

வேறு வழியின்றி சில பயணிகள் ஏசி கோச்சுகளில் டிக்கெட் எடுத்து பயணிப்பதும் உண்டு. ஆனால் இவ்வாரம் இறுதி நாட்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திரும்ப எந்தவொரு ரயிலிலும் டிக்கெட் இல்லை என்ற அவலம் காணப்படுகிறது. சென்னையில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கு அரசு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்ேவறு அரசு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் முடிந்து இன்று பலரும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திரும்புகின்றனர்.

இதுதவிர வரும் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை நிறைந்த முகூர்த்த நாளாக கருதப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் பலரும் ஊர் திரும்ப முடிவு செய்து முன்பதிவுகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நேற்றும், இன்றும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களில் ஏசி பெட்டிகளில் கூட இடமில்லை என்ற சூழல் காணப்படுகிறது.

நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 120 தட்கல் டிக்கெட்டுகள் சாதாரண தட்கல் டிக்கெட்டுகளாகவும், 120 டிக்கெட்டுகள் பிரிமியம் தட்கல் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும். நேற்றும், இன்றும் சென்னையில் இருந்து நெல்லை திரும்ப ஒரு பிரிமியம் தட்கல் டிக்கெட்டின் விலை ரூ.3900 என இருந்தும், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் ேவறு வழியின்றி பயணிகள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.