இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் திரைப்பட ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிடுகிறார்.
இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்று விடுதலை திரைப்படத்தின் சண்டைக் காட்சி எடுக்கும்போது ரோப் கயிறு அருந்து கீழே விழுந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.