அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே கண்டியங்கொள்ளை கிராமத்தில் வசித்து வரும் ஜெயக்குமார் கடந்த மூன்று வருடமாக ஒரு 17 வயது சிறுமியை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். அந்த சிறுமி போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்த காரணத்தால் அந்த சிறுமியை பழிவாங்க வேண்டும் என ஜெயக்குமார் நினைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயக்குமார் சிறுமியை கடத்தி தங்களது முந்திரி காட்டில் உள்ள ஒரு தனி வீட்டில் அடைத்து வைத்து கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.
இந்த செயலுக்கு ஜெயக்குமாரின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கிடையில், சிறுமியை காணாததால் பெற்றோர் தவித்து போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ஜெயக்குமார் தலைமறைவாகி விட அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதில், உடந்தையாக இருந்த ஜெயக்குமாரின் தாய் சாந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் தான் சைக்கோ தனமாக இதுபோல கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அரங்கேறும் அதை மிஞ்சும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.