உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மக்களவைத் தொகுதியிலும், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மெயின்புரி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி வரை 7.08% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும். அதே நாளில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மெயின்புரியில் சமாஜ்வாதி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானதால், இந்த இடம் காலியானது. அதனால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மெயின்புரி மக்களவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் யாருடைய உத்தரவின் பேரில் நிர்வாகம் செயல்படுகிறது என்று தெரியவில்லை. என்ன விளக்கம் கொடுக்கப்படும்? காலை முதல் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வாக்களிக்க போலீசார் மக்களை அனுமதிவில்லை என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறை கூறியுள்ளார்.
Mainpuri election: SP chief Akhilesh Yadav casts his vote, alleges police restricting voters
Read @ANI Story | https://t.co/V1G2qlcjzK
#MainpuriByelection #SamajwadiParty #AkhileshYadav pic.twitter.com/eG57qSNSZX— ANI Digital (@ani_digital) December 5, 2022
உத்தரபிரதேசத்தில் ராம்பூர் சதார் மற்றும் கட்டௌலி, ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானில் சர்தர்ஷாஹர், பீகாரில் குர்ஹானி மற்றும் சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
‘யாதவ் என்ற குடும்பப்பெயர் கொண்ட 2000 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்று சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் குற்றம் சாட்டுகிறார். எட்டாவாவின் சைஃபாயில் வாக்களித்த அவர், தலைவர் முலாயம் சிங் யாதவ் பெற்ற வாக்குகளை விட, தற்போது கட்சியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான டிம்பிள் யாதவ் மூன்று மடங்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்” என்று கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் சதார் மற்றும் கட்டௌலி சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக மற்றும் எஸ்பி-ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) காங்கிரஸும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மைன்புரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த பாஜக குண்டர்கள் சமாஜ்வாதி முகவர்களைத் தள்ளினார்கள் என ராம் கோபால் யாதவ் குற்றம் சாட்டினார். ‘மைன்புரியில், 141, 142, 143, 144, 145, 146 ஆகிய சாவடிகளில் முகவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பேசியிருக்கிறோம், அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
‘காவல்துறை நிர்வாகம் முறைகேடு செய்கிறது. தேர்தல் பணிக்கான பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வாக்குச் சாவடிக்கு வந்தபோது, 2000 தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்களின் குடும்பப்பெயர் யாதவ் என்பதால், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். யாதவ்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவரும் சமாஜ்வாதி கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.