அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்..

கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களவழி நாற்பது:
”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கிலே – கார் நாற்பது
கார்த்திகை சாற்றில் கழி விளக்குப்
போன்றனவை – களவழி நாற்பது

அகநானூறு:
”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை”

சீவக சிந்தாமணி:
குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தார்

image
நற்றிணை:
சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58
“கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” – பரிபாடல்
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” – மலைபடுகடாம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.