காபூல், ஆப்கானிஸ்தானில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்துச் சிதறி, ஆறு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மஸாரே ஷரிப் என்ற இடத்தில், அரசின் பெட்ரோலிய நிறுவன பஸ் ஒன்று ஊழியர்களுடன் சென்றது.
அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் இருந்த ஆறு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்த மற்றொரு பஸ் மற்றும் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
”ஆனால், ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இம்மாதிரியான கோர தாக்குதல்களை அடிக்கடி நடத்தி வருகிறது,” என, தலிபான் போலீஸ் செய்தித் தொடர்பாளர் மொஹம்மத் ஆசிப் வஸிரி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement