ஆளுநர் எனும் ஆறாம் விரலை வெட்டி எறிய வேண்டும்… சீமான் ஆவேசம்!

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த இருமாத காலமாக ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நிர்வாகச் சீர்திருத்தத்தை காரணம் காட்டி ஊதியம் வழங்காமல் ஆசிரியப் பெருமக்களின் குடும்பங்களை வறுமையில் வாடவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி இயக்குநர் பணியிடங்களும் தற்போது தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, தனியார் கல்வி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 32 புதிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கும் வகையில் ஆணையிடப்பட்டு அதற்கேற்ற வகையில் இணையதளத்தில் உள்ளீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் கடந்த இரு மாதங்களாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் ஆசிரியப் பெருமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இணையத்தில் பதிவேற்றம் செய்து வங்கி மூலமாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் நிலவுமாயின், அதுவரை அவர்களுக்கு நேரடியாக ஊதியத்தை வழங்கி இருக்கலாமே? அதை செய்யத்தவறி, மாத ஊதியத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் ஆசிரியப்பெருமக்களையும், அலுவலர்களையும் தவிக்கவிடுவது நியாயம்தானா?

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று

தெரிவித்துள்ளார்.

ஆறாம் விரல்:
முன்னதாக, சட்டமேதை அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது கருணாநிதி இருக்கும்போது தமிழ்நாட்டில் ஆளுநர் இருந்த இடம்கூட தெரியாத அளவுக்கு இருந்து வந்தனர். ஆனால் இன்று தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா தொடர்பாக திமுக அரசு எடுக்கிற முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை. ஆளுநர் ஆறாம் விரலாக இருந்து வருகிறார். தேவையில்லாத அந்த ஆறாம் விரலை வெட்டி எறிய வேண்டும்” என்று சீமான் ஆவேசமாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.