இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்… ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து


பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் பட்டங்களை பறிக்கவேண்டும் என இளவரசி டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர்

இளவரசி டயானாவுக்கு உணவு பரிமாறுதல் முதலான முக்கிய பணிகளை கவனித்துக்கொண்ட பட்லர் என்னும் பொறுப்பில் இருந்தவரான Paul Burrell (64) என்பவர், டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று கூறப்படுவதுண்டு. டயானாவே, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நபர் இந்த Paul Burrellதான் என்று கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு.

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்... ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து | Paul Burrell Calls Harry Meghan

Image: TALKTV

டயானா உயிரிழக்கும் வரை அவரது பணியாளராக இருந்தார் இந்த Paul Burrell.

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் பட்டங்களை பறிக்கவேண்டும்

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Paul Burrell, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் பட்டங்களை பறிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
 

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், இளவரசர் ஹரி தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளுக்காக அவரை பாராட்டியிருப்பார் என்று கூறிய Paul Burrell, ஆனால், இப்போது ஹரி செய்யும் விடயங்களுக்காக அவரை டயானா பாராட்டியிருக்கமட்டார். ஏனென்றால், இது வியாபார ரீதியானது என்கிறார் அவர். 

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்... ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து | Paul Burrell Calls Harry Meghan


Image: Tim Graham Photo Library via Getty Images

இளவரசி டயானா யாரிடமிருந்தும் ஒரு பென்னி கூட வாங்கியதில்லை என்று கூறும் Paul Burrell, அவர் ராஜ குடும்பத்துக்கு பெரும் ஆதரவாக இருந்தவர் என்கிறார்.

Paul Burrellஇடம், நீங்கள் மன்னராக இருந்தால், இளவரசர் ஹரியும் மேகனும் செய்யும் விடயங்களை எப்படிக் கையாள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த Paul Burrell, அவர்களது பட்டங்களை பறிக்க பரிந்துரைப்பேன் என்றார்.

அவர்களுடைய பட்டங்களைப் பறிக்கவேண்டும், அவர்கள் ராஜ குடும்ப உறுப்பினர்களாக இருக்க விரும்பவில்லை என்றால் தங்கள் பட்டங்களை வைத்து ஏன் பணம் பார்க்கவேண்டும் என்கிறார் Paul Burrell.
 

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்... ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து | Paul Burrell Calls Harry Meghan


Image: Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.