`எலிகளை கொல்ல ரத்தவெறி கொண்ட ஆள்கள் வேண்டும்'; நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலி தொல்லை அதிகரித்துள்ளது. அதனால், எலியைக் கட்டுப்படுத்தவும், அவற்றை கூண்டோடு அழிக்கவும், அமெரிக்க அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. 

Rat

இந்நிலையில் நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் டிசம்பர் 1-ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், ”எலிகளை கொல்பவர்களுக்கான வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், இவர்களுக்கு ஆண்டுக்கு 170,000 அமெரிக்க டாலர்கள் வரை ஊதியமாக வழங்கப்படும்” என்றும் கூறியிருந்தார்.  

அந்த பதிவில், “எலிகளை விட நான் வெறுக்க கூடிய விஷயம் எதுவும் இல்லை. நியூயார்க் நகரத்தின் இடைவிடாத எலிகளின் எண்ணிக்கையை எதிர்த்து போராட உங்களுக்கு உந்துதல், உறுதி, கொலையாளி உணர்வு இருந்தால்,.. உங்களுக்கான கனவு வேலை காத்திருக்கிறது’’ என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் இவ்வேலை குறித்து மேயர் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, “எலிகள் நோயை பரப்புகின்றன. வீடுகள் மற்றும் வயரிங்கை சேதப்படுத்துகின்றன. மனித வேலையை கைப்பற்றும் முயற்சியில், சமையலறை ஊழியர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

எலிகளை கட்டுப்படுத்திக் கொல்லும் வேலைக்கு ஆண்டுக்கு, 120,000 முதல் 170,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும். இவ்வேலைக்கு சேர விரும்புபவர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும். சிறிதளவு ரத்த வெறி இருக்க வேண்டும். எலிகளை கொலை செய்வதற்கான உள்ளுணர்வு இருக்க வேண்டும். 

எலிகள் இந்த வேலை வாய்ப்பை வெறுக்கும். ஆனால் ஆனால் 8.8 மில்லியன் நியூயார்க்கர்களும், உங்கள் அரசாங்கமும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், தூய்மையை அதிகரிக்கவும், கொள்ளைநோய்களைத் தடுக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது’’ என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

எலிகளை கொல்ல ஆள் எடுக்கும் அரசின் இச்செயல், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.