கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம்


தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பதை அறிந்த மனைவி, ஆத்திரம் கண்ணை மறைத்ததால் செய்த செயல், நாடே அவரது வீட்டை இன்று பேய்வீடு என அழைக்கும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.

கணவனைக் குறித்த நீண்ட நாள் உண்மை தெரியவந்ததால் ஆத்திரமடைந்த மனைவி

மலேசியாவிலுள்ள Selangor என்ற இடத்தில், 19,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான வீடு ஒன்றில் மனைவியுடன் வாழ்ந்துவந்தார் சஞ்சய் (Sanjay Gill).

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம் | Haunted House Housewife Hung Husbands

image – dailystar

ஒரு கட்டத்தில், அவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்த விடயம் அவரது மனைவிக்குத் தெரியவந்துள்ளது.

ஆத்திரமடைந்த அவரது மனைவி, தன் கணவரின் காதலியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். அதற்குப் பிறகு நடந்ததுதான் பயங்கரம். அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது தலையை வெட்டி தாங்கள் வாழ்ந்த வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார் அவர்.

ஆனால், கொலை செய்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு வாட்டி வதைத்ததால், அதே வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் அவர்.

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம் | Haunted House Housewife Hung Husbands

image – dailystar

தொடர்ந்த மரணங்கள்

நடந்ததை அறியாமல் வீடு திரும்பிய சஞ்சய், தன் காதலி கொல்லப்பட்ட விடயம், தன் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயம் என தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்திகளைத் தாங்க இயலாமல் நிலைகுலைந்து கீழே விழுந்திருக்கிறார்.

உடனே மாரடைப்பு ஏற்பட, அந்த வீட்டிலேயே அவரது உயிரும் பிரிந்திருக்கிறது.

இந்த செய்தி மலேசியாவில் அனைவருக்கும் தெரியவரவே, அது பேய் வீடு என செய்தி பரவியுள்ளது. ஆகவே, பல ஆண்டுகளாக அந்த வீடு விற்பனை ஆகாமலே இருந்திருக்கிறது.

தற்போது, அந்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை 815,000 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி அந்த வீடு ஏலம் விடப்பட உள்ளது.
 

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம் | Haunted House Housewife Hung Husbands

image – dailystar



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.