அத்தியவசியத் திருத்தப் பணிகள் காரணமாக ஜா-எல உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
ஏக்கல, தடுகம, துடுல்ல, தெலதுர, கொட்டுகொட, அலவத்துப்பிட்டிய, தம்பத்துரே ஆகிய பிரதேசங்களிலும், உடுகம்பொல, மினுவங்கொட, ரத்தொழுகம ஆகிய பிரதேசங்களின் சில இடங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.