தொடரும் கொடூர கொலைகள்..!! டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கரைப் போல் பீகாரில் ஒரு பெண் கொலை.!!

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ஸோட்டி டெயிலோரி கிராமத்தில் வசித்து வருபவர் அஷோக் யாதவ். இவரது மனைவி நீலம் தேவி (40). இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன்வாங்கி இருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பும் பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நீலம் தேவி தனது மகனுடன் பக்கத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது அங்கு ஷகீல் தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்து உள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஷகீல் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து கூட்டம் நிறைந்த சந்தையில் அனைவர் முன்னிலையிலும் இளம்பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளணர்.

அந்த பெண்ணின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டினார். குற்றவாளிகள் அவரது காலையும் வெட்ட முயன்றனர், ஆனால் கூட்டம் கூடவும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்த மக்கள் பார்பைண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் ஷகீல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். தாக்குதலுக்கு உண்டான நீலம் தேவியை அங்கு இருந்த மக்கள் பாகல்பூர் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான நீலம் தேவியை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் அவரது கணவர் அஷோக் யாதவிற்கு தகவல் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து நீலம் தேவியின் கணவர் அஷோக் யாதவ் கூறிகையில், எங்களுக்கும் ஷகீலுக்கும் எந்த வித முன் பகையும் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என்றார்.

நீலம் தேவியை பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணா கூறுகையில், அவரது கைகள் மற்றும் மார்பகங்கள் முழுவதும் வெட்டப்பட்ட நிலையிலிருந்தது. அவரது முதுகில் ஆழமான காயங்கள் இருந்தன. கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவரைத் தேடி வந்த நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் முகமது ஷகீல் என அடையாளம் காணப்பட்டார். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் இன்னும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கரைப் போலவே பீகாரில் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.