தொடர்ந்து மூதாட்டிகளை குறிவைக்கும் காமூகன்.. மதுரையில் பகீர் சம்பவம்.! 

மதுரையில் உள்ள சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 2021 இல் தெருவில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த 75 வயதான மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கழுத்தை நெறித்து கொன்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளிவந்த நான்கு நாட்களில் மீண்டும் ஒரு 76 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதையடுத்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், மாவட்ட காவல்துறை ஜாமினை ரத்து செய்ய கோரி கோரிக்கை வைத்தது.

இதனை தொடர்ந்து அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை எஸ்பி எச்சரித்துள்ளார். மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.