பயணிகளுடன் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த பேருந்து: சடலமாக மீட்கப்பட்ட மக்கள்


வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் பயணிகள் பேருந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கி மொத்தமாக புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30க்கும் மேற்பட்ட பயணிகளுடன்

ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தொடர்புடைய பேருந்தானது 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலியிலிருந்து காண்டோடோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

பயணிகளுடன் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த பேருந்து: சடலமாக மீட்கப்பட்ட மக்கள் | Deadly Landslide Buried A Bus In Colombia

@reuters

இந்த நிலையிலேயே பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா நகரங்களுக்கு இடையேயான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த பேருந்து மொத்தமாக புதைந்து போயுள்ளது.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி 9 பேர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும், திங்கட்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், புதைந்து போன பேருந்தில் இருந்து மேலும் மூவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

பயணிகளுடன் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த பேருந்து: சடலமாக மீட்கப்பட்ட மக்கள் | Deadly Landslide Buried A Bus In Colombia

@reuters

இறந்த தாயாரை இறுக்கமாக கட்டியணைத்தபடி

சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் இந்த மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 9 வயதான சிறுமியும் ஒருவர். விபத்தில் சிக்கி இறந்த தாயாரை இறுக்கமாக கட்டியணைத்தபடி குறித்த சிறுமி உயிருக்காக போராடியுள்ளார்.

பயணிகளுடன் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த பேருந்து: சடலமாக மீட்கப்பட்ட மக்கள் | Deadly Landslide Buried A Bus In Colombia

@reuters

தற்போது அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 8 சிறார்கள் உட்பட மொத்தம் 34 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும், சடலங்களை மீட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.