பஸ் கட்டணங்களை மீளாய்வு செய்வது குறித்து ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், டீசல் விலை குறைக்கப்படதனால் பஸ் கட்டணங்களும் குறைக்கப்படுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
டீசல் விலை குறைக்கப்பட்டமை உண்மைதான். ஆனால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கு 12 காரணிகள் அவசியம். அவற்றில் ஒன்று தான் டீசல் விலை குறைப்பு. மேலும் 11 காரணிகள் இருக்கின்றன. இவற்றையும் ஆராய்ந்து பார்த்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.