`பீர், ஒயின் குடிப்பதால் புற்றுநோய் ஆபத்து’ – புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பீர், ஒயின் உள்ளிட்ட பல வகையான மதுபானங்களால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்று, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மதுபானங்கள் அழகுக்குக் கைக்கொடுக்கும், ஆரோக்கியத்துக்கு நல்லது என சிலர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆபத்துக்குக் காரணம், ஒயின், பீர் என எல்லா மதுபானங்களிலும் சேர்க்கப்படும் எத்தனால் எனும் ரசாயனம் என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.

மார்பகம், வாய், பெருங்குடல் உட்பட ஏழு வகை புற்றுநோய்கள், மதுபானத்துடன் தொடர்புடையவை. மதுபானம் உட்கொள்வதால் ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்ட 31.2% பேர் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் சதவிகிதம் முறையே 24.9 மற்றும் 20.3 என்கிறது அந்த ஆய்வு.

cancer

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்கன் அசோசியேஷன் இதழ் வெளியிட்ட ஆய்வுப்படி, “50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு மதுபானம் அருந்துவது புற்றுநோயை ஏற்படுத்தும் எனத் தெரிவதில்லை” என்கிறது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 10 சதவிகிதத்தினர், புற்றுநோய் பாதிப்பை ஒயின் குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுபோல பீர் உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை குறைக்கலாம் என 2.2 சதவிகிதத்தினரும், மதுபானங்கள் அருந்துவது புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் என 1.7 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

“புற்றுநோய் ஏற்படுத்தும் முன்னணி காரணிகளில் ஒன்று மதுபானம். ஆனால் இதை அறியாமல் அமெரிக்கர்கள் மதுவை அதிகமாக உட்கொள்வது கவலை அளிக்கிறது” என தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பிரிவு ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆண்ட்ரூ சீடன்பெர்க் கூறியுள்ளார்.

கேன்சர்

தேசிய புற்றுநோய் நிறுவனத்தின், செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சி திட்டத்தின் இணை இயக்குநர் வில்லியம் எம்.பி. கிளீய்ன் என்பவர், “ஒயின் உட்பட அனைத்து மதுபானங்களும் புற்றுநோய் ஏற்படுத்துகின்றன. எல்லாருக்கும் இந்த ஆய்வின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் வயதானவர்கள்தான் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர். சரியான விழிப்புணர்வு வழங்குவதன் மூலம் மதுபானத்தை அதிகமாக உட்கொள்ளும் நிலையை கட்டுக்குள் கொண்டு வரலாம். இதனால் இறப்பு சதவிகிதமும் குறையும்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.