கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவரின் மகனான ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.
ராமகிருஷ்ணன் அதே கல்லூரியில் படித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்த விஷயம் ஜெயஸ்ரீயின் தந்தைக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவரை கண்டித்துள்ளனர். ஆனால், ஜெயஸ்ரீ தனது காதலை கைவிட மறுத்ததால் அவரை கல்வராயன் மலையில் இருக்கும் ஒரு பூசாரியிடம் அழைத்துச் சென்று மாந்திரீக வேலை செய்துள்ளனர்.

இருப்பினும் ஜெயஸ்ரீ தனது காதலை கைவிடவில்லை இந்த தகவலை தனது காதலனுக்கு ஜெயஸ்ரீ தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த மனுவை பெற்ற அவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த புதுமன ஜோடி அங்கிருந்து சென்றுள்ளது. மாலையும், கழுத்துமாக எஸ்பி அலுவலகத்தில் புகுந்த இந்த ஜோடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.