”மைனர் பெண்ணின் சம்மதம் சம்மதமே அல்ல" – பாலியல் வழக்கில் இளைஞரை கண்டித்த நீதிமன்றம்!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், மைனர் சிறுமியின் சம்மதம் சட்டத்தின் பார்வையில் சம்மதம் என்று இல்லை என கூறியுள்ள கருத்தை அனைவரும் வரவேற்று உள்ளனர்.
நீதிபதி ஜஸ்மீத் சிங் அடங்கிய தனி நீதிபதி பெஞ்ச் நவம்பர் 23 அன்று அளித்த உத்தரவில், 2019ல் சிறுமியை பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டதன் அடிப்படையில் ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
image
விசாரணையில், தன்னுடன் உடல் உறவில் இருந்தபோது புகார் அளித்தவர் மைனர் இல்லை என்பதை நிறுவுவதற்காக, சிறுமியின் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. 16 வயது சிறுமியை 23 வயதாக்கி உள்ளார். சிறுமியின் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதன் மூலம், குற்றம் நடந்தபோது அந்த சிறுமி மைனர் இல்லை என்பதை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஆதார் அட்டையில் வயதை மாற்ற முயற்சித்தது “கடுமையான குற்றம்” என நீதிபதி குறிப்பிட்டடுள்ளார். மேலும் தொடர்ந்து, மைனரின் சம்மதம் என்பது எல்லாம் ஜாமீன் பெற்று தராது. மைனரின் சம்மதம் சட்டத்தின் பார்வையில் சம்மதம் இல்லை,” நீதிபதி ஜஸ்மீத் சிங் என்று சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளார்.
image
வழக்கின் பின்னணி என்ன?
2019ம் ஆண்டு தனது மகள் காணாமல் போனதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர், உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் இருந்து சிறுமியை கண்டுபிடித்து மீட்டு அழைத்து வந்தனர். தனது வாக்குமூலத்தில் அவர் தனது காதலன் எனவும், அவருடன் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த நபர் தனது சம்மதத்துடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவருடன் இருக்க விரும்புவதாகவும் கூறிள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் 2019 ஆம் ஆண்டு முதல் காவலில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாகவும் கூறி ஜாமீன் கோரினார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தான், ‘மைனரின் சம்மதம் என்பது சட்டத்தின் பார்வையில் சம்மதம் இல்லை,” என்று கூறிய நீதிமன்றம், குற்றவாளியின் ஜாமீன் மனுவை நிராகரிப்பு செய்துள்ளது.
இதையும் படியுங்கள் – ”திட்டமிட்டு வீடியோக்களை பரப்புகிறார்கள்”.. LGBTQ தடை சட்டம் இயற்றிய விளாதிமிர் புதின்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.