ஆடை பற்றி பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி, 8 எவிக்சனுடன் பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மெயின் தலைகள் எல்லோரும் தங்கள் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டில் கெத்து காட்டி வருகிறார்கள். அவர்களில் விக்ரமன் மீது பல தரப்பினருக்கும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியானது முதலே நேர்மையோடும், சமூக பார்வையோடும் தனது கருத்தினை பதிவு செய்து விளையாடி வருகிறார். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கான அரசியலையும் அவ்வப்போது எடுத்துவிட்டார்.

இந்நிலையில், அவரே தற்போது ஆடைகுறித்த ஒரு கருத்தினை பேசி பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் சிவின் ஒரு ஆடையைக்காட்டி இதை நான் அணியட்டுமா? என்று கேட்க, முதலில் ஏடிகே வேண்டாம் என்று சொல்கிறார். அடுத்தடுத்தாக விக்ரமனும், 'என்னங்க இது அநியாயம்? குழந்தைகள், குடும்பங்கள் என எல்லோரும் பாக்குறாங்க. இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆடை தேவையா?' என்று கேட்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்த சிவின், 'குழந்தைகள் பார்ப்பதற்கும் டிரெஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அவங்களுக்கு எது நல்லது? எது கெட்டதுன்னு எல்லாத்தையும் சொல்லி கொடுத்து தான் வளர்க்கனும்' என்று கூறுகிறார்.

தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் பரவி வரும் நிலையில் விக்ரமனுக்கு ஆதரவாக சிலர் 'விக்ரமன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதான் சான்ஸ் என பிடித்துக்கொண்ட அசீமின் ரசிகர்கள், 'அப்படியென்றால் அசீம் சென்ற வாரம் ஆடை பற்றி பேசியது மட்டும் தவறா? என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.