பெங்களூரு, : ”குஜராத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கர்நாடகாவில் தாக்கங்களை ஏற்படுத்தும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அம்பேத்கர் 66வது நினைவு நாளை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை மாலை அணிவித்தார். பின் அவர் கூறியதாவது:
செழிப்பு, வளர்ச்சியை மக்கள் ஆதரிக்கின்றனர். பொய்யான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவில்லை என்பது தெளிவாகிறது.
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
குஜராத்தில் ஏழாவது முறையாக, பா.ஜ., அரசு அமையும் என தகவல்கள் வருகின்றன. மோடியின் தலைமை மற்றும் நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement