சென்னை அருகே ஓட்டேரி பகுதியில் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற (28 வயது) சினிமா சண்டை கலைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த ரீனா (28 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இத்தகைய நிலையில் கடந்த இரு நாட்களாக அரவிந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரீனாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய மனைவி ரீனாவிடம் தெரிவித்து வந்து இருக்கின்றார். இத்தகைய நிலையில் நேற்று காலை அரவிந்தன் குடித்து விட்டு வந்துள்ளார்.
பின் உறங்க செல்வதாக கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்று பூட்டி கொண்டார். அதிக நேரமாகியும் கதவை திறக்காததால் வீட்டிலிருந்தவர்கள் சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அரவிந்தன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.