‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் ‘மாறன்’ படத்திலும் நடித்தார்.
இவர் தந்தை மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர். அதனால் இவரும் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் மிக்கவராக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில்ஸ தற்போது மாளவிகா மோகனன் சிலம்பம் மீது காதல் கொண்டதாகத் தெரிகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
பயிற்சி வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், சிலம்பம் என்ற அற்புதமான உலகில் குழந்தையாக அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கலையை ஆழமாகக் கற்றுக் கொள்ளும் வரை காத்திருக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்கால தற்காப்புக் கலை. தங்கலான் படத்தில் இடம்பெறும் காட்சிக்காகவும் அவர் சிலம்பம் கற்க தொடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
newstm.in