திருமணம் எப்போது : அஞ்சலி பதில்

தமிழில் பல வெற்றி படங்களை தந்த அஞ்சலி சமீபகாலமாக பிறமொழிகளில் அதிக படங்களில் நடிக்கிறார். அதோடு வெப்சீரிஸூம் நடிக்கிறார். இவர் நடித்துள்ள ஃபால் என்ற வெப்சீரிஸ் இந்தவாரம் பல மொழிகளில் வெளியாகிறது. தினமலர் இணையதளத்திற்கு அஞ்சலி அளித்த பேட்டி : ‛‛இது ஒரு திரில்லர் டிராமா. எனக்கு திரில்லர் ரொம்ப பிடிக்கும். கதை மற்றும் எனது கேரக்டர் பிடித்ததால் நடித்தேன். பிற மொழிகளில் அதிகம் நடிப்பதால் தமிழில் நடிக்க முடியவில்லை. நான் நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். இயக்கம், தயாரிப்பு வேண்டாம்.

நான் ராம் சாரின் மாணவி என்பதை பெருமையாக சொல்வேன். அவருடன் ஒவ்வொரு படம் பண்ணும்போதும் ஒரு விஷயம் கற்றுக் கொண்டே இருக்கிறேன். புதிதாக நடிக்க வருபவர்கள் தைரியமாக இருக்கம் வேண்டும், கொஞ்சம் வீக்காக இருந்தாலும் தாக்கு பிடிக்க முடியாது. நல்லதோ, கெட்டதோ எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. திருமணம் பற்றி வீட்டில் கேட்பாங்க. ஆனால் எனது படங்கள் பற்றி அவர்களுக்கும் தெரியும் என்பதால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பெல்லாம் திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. திருமணம் பற்றி இப்போதைக்கு நான் யோசிக்கவில்லை, நிச்சயம் பண்ணுவேன். திருமணத்தை ரகசியமாக வைக்க மாட்டேன். எல்லோருக்கும் சொல்வேன்.

இந்த இயக்குனர் உடன் படம் பண்ணனும், இந்த நடிகருடன் நடிக்கணும் என்று யோசித்தது இல்லை. என்னை தேடி வரும் கதைகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் எனது முழு திறமையையும் வெளிப்படுத்தணும் என்று மட்டுமே எனது நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.