திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை T. சிவ நாராயணமுர்த்தி (66) இன்று (டிச. 7) இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் அவரது மனைவி புஷ்பவல்லிக்கும் லோகேஷ், ராம்குமார், ஸ்ரீதேவி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மறைந்த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிந் படத்திலும் நடித்துள்ளார். இவரை இயக்குநர் விசு அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அவரது முதல்படமாக பூந்தோட்டம் திரைப்படம் அமைந்துள்ளது.
இவரின் மறைவு செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.