கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்த மனோஜ் என்ற 19 வயது இளைஞர் கோவை பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கியவாறு படித்து வந்த நிலையில் மாதிரி தேர்வு முடிந்ததால் பல மாணவர்களும் விடுதியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.
ஆனால், ஊருக்கு செல்லாமல் இருந்த விஷ்ணு நீண்ட நேரம் ஆகியும் அறை கதவை திறக்கவில்லை. இதனால் பக்கத்து அறையில் இருக்கும் மற்ற மாணவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது விஷ்ணு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விடுதி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் இதற்குப் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.