பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் அசீம், வைரலாகும் போட்டோ

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இரவு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்றே கூறலாம். பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். 

அதன்படி பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமும் கோபி மீது கோபத்தில் இருக்கிறது.

பின் இனியா வீட்டில் உள்ள அணைவருடன் சண்டைப் போட்டுக்கொண்டு கோபியின் வீட்டிற்கு சென்று விடுகிறார். அதேபோல் கோபியின் அப்பாவும் அங்கு தங்குகிறார். அங்கு அவர்கள் ராதிகாவை பாடாய் படுத்துகிறார்கள், இப்படியே சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று வெளியான எபிசோடில் எழில் அமிர்தாவிடம் நட்பாக தான் இருக்க வேண்டும் காதல், கல்யாணம் என பண்ணக்கூடாது என்று ஈஸ்வரி சத்தியம் வாங்குகிறார். இதற்கு எழிலும் சம்பாதித்து விடுகிறார். இப்படி ஒரு பக்கம் சீரியல் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாட்டி, ஜெனி, செல்வி, எழில் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்கள். 

அப்போது பிக்பாஸில் விளையாடிக் கொண்டிருக்கும் அசீம் வரும் காட்சிகள் இதில் இடம்பெறுகிறது. அதில் அவரது முன்னாள் காதலி ஷிவானியும் இடம்பெற்று இருக்கிறார். இந்த வீடியோ மட்டும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.