பியூச்சர் ஆப் யங் இந்தியா : ராம் சரணுக்கு விருது

முன்னணி பத்திரிகை நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு 'ட்ரூ லெஜண்ட்க் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் இருந்து கொண்டே சமூக பணியாற்றி வரும் ராம் சரணுக்கு 'பியூச்சர் ஆப் யங் இந்தியா' விருது வழங்கி கவுரவித்தது.

இந்த விழாவில் ராம்சரண் பேசியதாவது: 1997ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்துவிட்டார். என் அப்பா (சிரஞ்சீவி) ஏற்கனவே மெகா ஸ்டார். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு அடுத்த வருடமே என் அப்பா ரத்த வங்கியைத் தொடங்கினார்.

இதேபோல், கோவிட் நேரத்தில் திரைப்பட தொழிலாளர்கள் 17 ஆயிரம் பேருக்கு உதவி செய்தோம். அது ஒரு சிறிய உதவி. அவர்களுக்கு அது மிகவும் தேவைப்பட்டது. நான் செய்து வரும் எல்லா பணிகளும் என் தந்தை தொடங்கி வைத்தது. வருங்காலங்களில் நானும் சில பணிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை எனது பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு ராம் சரண் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.