தமிழக மின்வாரியம் வீடுகள் உள்ளிட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் மின்வாரியத்தின் இணையதள மூலம் ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்த நிலையில் சில இடங்களில் சர்வர் கோளாறு மற்றும் காலதாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய இணையதளத்தை கடந்த டிசம்பர் 4ம் தேதி வெளியிட்டது.
அந்த வகையில் ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையத முறையை முகவரியை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இணையதளம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் எளிமையாக ஆதாரை இணைக்கும் பக்கத்துக்குச் செல்ல நேரடி லிங்கை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி https://Bit.ly/linkyouraadhar என்ற இணையதளத்தில் ஆதாரை இணைக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.