கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சென்ற நவம்பர் மாதத்தில் 24ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். வீட்டிலிருந்த 5 சவரன் தங்க நகை 60,000 ரொக்க பணம் மற்றும் செல்போனுடன் சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியின் செல்போன் குறித்து ஆய்வு செய்ததில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இயங்குவது போலீஸ் விசாரணை கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு உள்ள பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாயமான பள்ளி மாணவி வாலிபர் ஒருவருடன் இருந்துள்ளார். இதையொட்டி இருவரையும் மீட்ட போலீசார் அவர்களை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல்மேடு பகுதியை சேர்ந்த 22 வயதான லச்சி பிரபு என்பதும், அவர் ஒரு பைக் மெக்கானிக் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி காதலித்து வந்ததுள்ளனர்.
பின், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் நகைகளை அடகு வைத்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள கோவில்களில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் அங்கே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.