கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் வரும் டிசம்பர் 5 ஐந்தாம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடியாக வகுப்புகளை துவங்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்கும் விதமாக நான்கரை மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்படுவதால் வாழைமரம் தோரணம் உள்ளிட்டவை கட்டி பள்ளி திறக்கப்பட்டது.
அதன்பின் காலையில் வழக்கம் போல இறைவணக்க கூட்டம் நடந்து, பின், வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. மற்ற மாணவர்களுக்கும் விரைவில் வகுப்புகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதுவரை அவர்கள் ஆன்லைனில் வகுப்புகளை கவனிப்பார்கள்.