சென்னை: தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருமால் பாபு, வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வராகவும், கூடுதல் மருத்துவ இயக்குநராக இருந்து சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரிக்கும், குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்து ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், பெருந்துறை மருத்துவ கல்லூரி முதல்வர் மணி பணியிடமாற்றம் செய்து குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தராமன் கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
