மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இங்கு நடந்த மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலிருக்கும் அகாபுல்கோ நகரின் ஒரு விடுதியில் உள்ள மதுபான கூடத்தில், நேற்று முன் தினம் இரவு திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், அங்கு மது அருந்திய மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.
மேலும் இருவர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், அகாபுல்கோ நகரின் மற்றொரு இடத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement