வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைன் உடனான போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசியபோது, அணு ஆயுத பயன்பாடுகள் குறித்து கேள்வி கேட்டபோது, அணு ஆயுதங்கள் என்றால் என்ன என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என அவர் கூறினார்.

தொடர்ந்து ரஷ்ய அதிபர் பேசுகையில், அணு ஆயுதங்களை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம். உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம். ஆயுதங்கள் ஒரு தடுப்பு, மோதலை அதிகரிக்க தூண்டும் காரணி அல்ல. ஒருவேளை அமைதி வழிமுறைகள் தோற்றால், ரஷ்யா தனது நலன்களை பாதுகாக்க “எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும்” பயன்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement