பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க சப்பாத்தியை தினமும் சாப்பிட்டு வருகிறார்கள்.
சப்பாத்தி முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தியை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள்.
ஆனால் இப்படி சப்பாத்தியை தினமும் சாப்பிடுவது நல்லதா என்பதை பற்றி இங்கெ தெரிந்து கொள்வோம்.

image – goodto.com
எப்படி உதவுகிறது?
- சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் நிரம்பியுள்ளது. எனவே இது உடலுக்கு வேண்டிய போதுமான ஆற்றலை வழங்குகிறது. மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது.
- சப்பாத்தி உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமின்றி, மனநிலையை மேம்படுத்தவும் செய்கிறது.
- குறிப்பாக சப்பாத்தியை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் சுடும் போது, அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை இழப்பிற்கு சிறந்த உணவாக விளங்குகிறது.
சத்துக்கள்
- முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9, வைட்டமின் ஈ ஆகிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
- ஜிங்க், காப்பர், அயோடின், சிலிகான், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
- ஒரு சிறிய அளவிலான சப்பாத்தியில் 70 கலோரிகள், 3 கிராம் புரோட்டீன், 0.4 கிராம் கொழுப்பு மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட் 15 கிராம் உள்ளது.
பயன்கள்
- சப்பாத்தியை சாப்பிடும் சருமம் பளபளப்பாகவும் ஜொலிக்கவும் வைக்க உதவுகின்றது.
-
சப்பாத்திரியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதால், இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றது.
- மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.