பாராளுமன்றத்தினால் நவம்பர் 26 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.
இதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ தாரக்க பாலசூரிய, கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, கௌரவ ஜீவன் தொண்டமான், கௌரவ அகில எல்லாவல, கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ மர்ஜான் பளீல் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.