தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்று, காரைக்காலுக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும். இதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக வரும் 10ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்வு 17ம் தேதிக்கு மாற்றம் செய்படுவதாக தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.