நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
“ஐ. நா சபையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில், இந்தியா எதற்காக வாக்களிக்கவில்லை? சமீபத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல் வந்தது. அப்போது, இந்தியாவின் நலனை காப்பதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, ”ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் வாக்களிக்கவில்லை. ஏனென்றால் இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களும் இதையே தான் செய்தது.
பல சமூகங்களை உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். கடுமையான பொருளாதார சூழ்நிலையில் கூட நாம் உதவ முன்வரவில்லை என்றால், நாம் நமது பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டது போலாகிவிடும்” என்றுத் தெரிவித்தார்.