இந்தியா வந்த சுவிஸ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…


இந்தியாவுக்கு வந்த சுவிஸ் தம்பதியர் விபத்தொன்றில் சிக்கிய நிலையில், மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 

சாலை விபத்தில் சிக்கிய சுவிஸ் தம்பதியர்

சுவிட்சர்லாந்து நாட்டவர்களான Jaroslav, Evelyne (52)தம்பதியர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், பூரி என்ற இடம் நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்கள் பயணித்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ட்ரக்குடன் மோதியுள்ளது.

தம்பதியரும், காரின் சாரதியும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தலையில் படுகாயமடைந்த Evelyne வழியிலேயே உயிரிழந்துவிட்டார், அவரது கணவரான Jaroslavம், காரின் சாரதியும் காயமடைந்தாலும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து சுவிஸ் தூதரகத்துக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த மகள் கண்ணீர்

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகம் வாயிலாக கேள்விப்பட்ட தம்பதியரின் மகளான Vanessa, தனது தாய் தனது 27ஆவது பிறந்தநாளன்று உயிரிழந்துள்ளதாகவும், அவரது பிரிவால் தான் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்மா, நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூறியுள்ள Vanessa, நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், நீங்கள் எப்போதும் நீங்காமல் என் மனதில் இருப்பீர்கள் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா வந்த சுவிஸ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... | Swiss Woman Dies In Car Crash



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.