இளவரசர் ஹரி-மேகன் அரச பட்டங்களை பறிக்கும் சட்டம்: பிரித்தானிய எம்.பி முன்னெடுக்கும் திட்டம்


நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் அரச பட்டங்களை பறிக்கும் சட்டத்தை கொண்டு வர பிரித்தானிய அமைச்சர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

ஹரி & மேகன் நெட்ஃபிக்ஸ் தொடர்

பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படம் நெட்ஃபிக்ஸில் நேற்று வெளியாகியுள்ளது.

இந்த நெட்ஃபிக்ஸ் தொடரின் முதல் மூன்று எபிசோடுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அரச குடும்பம் மற்றும் அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை இந்த ஆவணப்படம் ஏற்படுத்தி வருகிறது.

பட்டங்களை பறிக்கும் சட்டம்

ஹரி & மேகன் ஆவணப்படம், அரச குடும்பத்தில் இருந்து நேரடியாக முரண்பட்டு நிற்கிறது. இந்நிலையில் ஐல் ஆஃப் வைட் பகுதியின் கன்சர்வேட்டிவ் எம்பி பாப் சீலி  டியூக் இளவரசர் ஹரி மற்றும் டச்சஸ் இளவரசி மேகன் மார்க்கலின் அரச பட்டங்களை பறிக்கும் சட்டத்தை முன் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பான குறுகிய தனிப்பட்ட உறுப்பினர் மசோதா வரும் புத்தாண்டில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Harry and Meghan-ஹரி மற்றும் மேகன்(Netflix)Harry and Meghan-ஹரி மற்றும் மேகன்(Netflix)

இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சர்களின் அளிக்கும் வாக்குகள், ஹரி மற்றும் மேகனின் அரச பட்டங்களை பறிக்கும் சக்தியை Privy கவுன்சிலுக்கு வழங்கும் என  தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா தொடர்பாக ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே முடிவு செய்து விட்டதாக எம்.பி பாப் சீலி தெரிவித்துள்ளார். அத்துடன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஹரியின் இந்த கருத்துகள் “அரசியல் பிரச்சனை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச பட்டங்களை பயன்படுத்தி கொண்டே அரச மாட்சியமையையும், அரச குடும்பத்தையும் எதற்காக குப்பையாக்க வேண்டும் என பாப் சீலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Harry and Meghan-ஹரி மற்றும் மேகன்(Netflix)Harry and Meghan-ஹரி மற்றும் மேகன்(Netflix)

பி.ஏ செய்தி நிறுவனத்திற்கு எம்.பி பாப் பேசிய போது, அரச குடும்ப உறுப்பினர்களை குற்றம்சாட்டுகின்றனர், தங்களுடைய துயரங்களை பொது நுகர்வுக்கு அளித்து பணம் ஆக்குகின்றனர் மற்றும் நாட்டின் முக்கிய நிறுவனங்களையும் அவர்கள் தாக்குகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.