இந்தியாவின் புது தில்லியில் நிழவுகின்ற காற்று மாசடைவு காரணமாக. இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து செல்கின்றது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசடைவுடன் ஒப்பிடும் போது, தற்போது அது கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசடைவு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இலங்கையில் மிக மோசமாக காற்று மாசடைந்துள்ளது.
மேலும், இந்த விஷவாயுவை சுவாசிப்பதனால் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, முடியுமானவரை வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்கு அருகாமையில் காற்று மாசடைவதற்கான முக்கியமான காரணம், பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த பிறகு வைக்கோல் போன்றவற்றை எரிப்பது ஆகும்.
மேலும், இந்தியாவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு கொளுத்தியதன் ஊடாக வெளியான கார்பன் டயொக்சைட், நைட்ரஜன் டயொக்சைட், சல்பர் டயொக்சைட் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வளிமண்டலத்துடன் சேர்ந்ததன்; மூலம் இந்த நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.