தஞ்சை: சிசிடிவி வயர்களை துண்டித்து ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சிற்றம்பலத்தில் பழங்கால அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போனது தொடர்பாக மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோயில் உள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
image
இந்நிலையில், இக்கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் நடராஜர் சன்னதியில் இருந்த 4 அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலையிலான சிலை மற்றும் ஓரு அடி உயரம் கொண்ட சோமாஸ்கந்தர் சிலை ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர்.
இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறந்த பணியாளர்கள், சிலைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார், கோயிலை சோதனை செய்தனர்.
image
இதில், கோயிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்து விட்டு சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் அமுதா, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுக்கான் கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் டஃபி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
image
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் மற்றும் புக்கரம்பை ஊராட்சியில் உள்ள தான்தோன்றியம்மன் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகள் என அடுத்தடுத்து பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் தொடர் சிலை திருட்டு நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.