வளிமண்டலத்தில் உள்ள தூசித் துகள்கள் அதிகரித்துள்ளமை மற்றும், புயலால் சில பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (09) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கு பின்னரே அரச மற்றும் அரச சார்பற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.