தேசிய உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்ததாக வவுனியா மாவட்டத்தில் சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 29,000க்கும் மேற்பட்ட வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் தற்போது மிகவும் வெற்றிகரமானதாக அறுவடை செய்யப்பட்டுவருவதாக வவுனியா மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலைகள் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் குறித்த நச்சுத்தன்மையற்ற மரக்கறிகளுக்கும் சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.
நச்சுத்தன்மையற்ற மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் உற்பத்தியாளர்களால் பாவனைக்காக எடுத்துச் கொள்ளப்பட்டதன் பின்னர் மேலதிகமானவை சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.